Monday, March 22, 2010

என் வீதியில்...

இன்று
வானம் பார்த்தேன்

ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள்
சதுரமாய் சிரித்தது நிலவு

மணலலைகள் கிளம்பி
கடலுக்குள் சென்றன
கரையிலிருந்து
திமிங்கலம்
ஒன்றை விழுங்கியது
சின்ன நெத்திலி

பகலிலேயே அல்லிகள் பூக்க
பாலையிலிருந்து பீறிட்டன நீரூற்றுகள்

பூமி தொடவில்லை பாதங்கள்
சிறகு விரித்து பறக்கத் தொடங்கினேன்
ஒன்பதாம் திசையில்
பட்டமரமொன்றில் அமர புஷ்பித்தது
இலைகளில் இருந்தும் கமழ்ந்தது சுகந்தம்

தீத்தொட தித்திக்கிறது இனிப்பாய்
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை

இன்று ஏன் வானம் பார்த்தேன்?

No comments:

Post a Comment