Monday, March 22, 2010

நியதிகளின் சுமை...

தூக்கத்தின் நேரம் கழிந்தும்
வெள்ளியோடு பேசிய வார்த்தைகளில்
கிழிந்துவிடவில்லை இருள்

இயந்திர ஓட்டத்தில்
சிக்குண்டு நசுங்கிய அரிசியாய் வலி

கண்கள் மயங்கி சோர்வு
நிமிர்ந்து உட்காரத் திமிர்ந்தும்
கேள்வியாய் முதுகு

கணவனுக்கு சாப்பாடு
பெற்றோருக்கு பத்தியம், மருந்து, மாத்திரை...
முகத்தில் அசதி மறைத்து
மேலாளரிடம் புன்னகை

மீட்க முடியாத அதிர்வின் இழப்பில்
நெற்றியில் முத்து முத்தாய்
வியர்வைத் துளிகள்

கொஞ்சமே கொஞ்சம் இதம் தடவி
வருடும் இதயம் வேண்டி
இமை மூடி மௌனம்
எனக்கான வாழ்வனுபவம்

வலி உணரும் மக்களாக
மனிதர்கள் மாறுவது
எப்போது ?

No comments:

Post a Comment